தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் பணிப்பாளரை நியமிப்பதில், ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையில் எவ்வித மோதல்களும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று (15/11) நடைபெற்ற ஊடகவிலாளர்; சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் அவ்விடயம் தொடர்பில் தொடர்ந்துரைக்கையில், தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபை சட்டத்திற்கு அமைய அந்த நிறுவனத்தின் பணிப்பாளரை நியமிக்கும் முழுமையான அதிகாரம் துறைக்கு பொறுப்பான அமைச்சர் எனக்கே உள்ளது. அமைச்சர் என்ற வகையில் சரியானதை செய்ய முடியாது என்றால், வேறு வேலையை பார்ப்பேன் என தெளிவாக கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், அதிகாரி யார் என்பதை தீர்மானிப்பது, நியமனக் கடித்தில் கையெழுத்திட்டு தானே வழங்கியதாகவும், அந்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்ட போது, சில விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், சில தெரிவுகள் தற்காலிகமாக முன்வைக்கப்பட்டன. அவற்றை ஆராய்ந்த போது, அவை சம்பந்தமாக விடயங்களை முன்வைத்து, தகுதியான அதிகாரியை தெரிவு செய்யும் போது, சில குறைகள் இருக்குமாயின் அவை குறித்து விரிவாக தான் ஜனாதிபதியுடனும் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன் போது ஏற்பட்ட இணக்கத்திற்கு அமைய அனைத்து தகுதிகளையும் கொண்டவரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும், அதற்கமைய தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபை மற்றும் அமைச்சரின் இணக்கத்திற்கு ஏற்ப நியமனம் வழங்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தொடர்ந்தும் தெரிவித்தார்.