உலக அணியில் 2 இலங்கையர். இந்தியர்கள் இல்லை.

சர்வதேச கிரிக்கெட் பேரவை, நிறைவடைந்த 20-20 உலக கிண்ண தொடரில் பிரகாசித்த வீரர்களை தெரிவு செய்து உலக அணியாக அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட அணியில் இலங்கை வீரர்களான வனிது ஹசரங்க, சரித் அசலங்க ஆகியோர் 11 பேருக்குள் இடம் பிடித்துள்ளனர்.
பலமான அணியாகவும், பலமான வீரர்களாகவும் போற்றப்படும் இந்தியா அணியினை சேர்ந்த வீரர்கள் எவரும் இந்த அணிக்குள் இடம் பிடிக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அஸாம் இந்த அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அணி விபரம் – டேவிட் வோர்னர் (அவுஸ்திரேலியா), ஜோஸ் பட்லர்(இங்கிலாந்து), பாபர் அஸாம்(பாகிஸ்தான்), சரித் அசலங்க(இலங்கை), எய்டன் மார்க்ராம்(தென்னாபிரிக்கா), மொயின் அலி(இங்கிலாந்து), வனிது ஹசரங்க(இலங்கை), அடம் ஷம்பா(அவுஸ்திரேலியா), ஜோஸ் ஹெசல்வூட்(அவுஸ்திரேலியா), ரென்ட் பௌல்ட்(நியூசிலாந்து), அன்றிச் நோரஜ்க்யா(தென்னாபிரிக்கா)

உலக அணியில் 2 இலங்கையர். இந்தியர்கள் இல்லை.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version