ஒரு கிலோ வெங்காயத்தின் விலை திடீரென 100 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 450 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 260 ரூபா முதல் 280 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 380 ரூபாவாக பதிவாகியுள்ளது.
லங்கா சதொசவிலும் நேற்றைய தினம் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 365 ரூபாவிற்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டும் நுகர்வோர், அரசாங்க நிறுவனம் ஒன்று எவ்வாறு இப்படி விலையை அதிகரிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.