சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தடையை நீக்கும் முகமாக முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட, ஸ்ரீ லங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபைக்கான வர்த்தமானி அறிவிப்பை, மீள பெறுவதற்கான வர்த்தமானியில் தான் கையொப்பமிட்டுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். இந்த இடைக்கால நிர்வாகம் தொடர்பிலான வழக்கு நீதி மன்றத்தில் நடைபெறும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையானது பரிசீலனை செய்வதற்காக, சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.