VAT வரியை 18 வீதம் வரை உயர்த்தும் அரசாங்கத்தின் வரி திருத்தச்சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி கிடைக்கப் பெற்றதை கொண்டாடும் வகையில் நேற்றிரவு அலரி மாளிகையில் விருந்துபசாரமொன்று இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரதமர் நடாத்திய இந்த விருந்துபசாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வாழ்க்கையை மேலும் சீரழிக்கும் VAT வரி உயர்வை கொண்டாடும் அரசாங்கம் தொடர்பில் மக்கள் விழிப்படைய வேண்டும் எனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.
VAT வரியை அதிகரிப்பது தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.