அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகரித்த வருமான வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 9.00 மணி முதல் நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் மருத்துவ பொறியியல், வங்கி உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.