உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு கடனுதவி..!

ஆரம்ப சுகாதார சேவை கட்டமைப்பை வலுவூட்டும் திட்டத்தின் கீழ், உலக வங்கியினால் 34 மில்லியன் டொலர் கடனுதவி திறைசேறிக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலக வங்கியிடமிருந்து மேலும் 20 மில்லியன் டொலர் கடனுதவி கிடைக்கப்பெறவுள்ளதாக உலக வங்கியின் செயற்றிட்ட பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் இறுதி தீர்மானங்களை ஆராய்ந்ததன் பின்னர் குறித்த நிதியினை வழங்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது.

ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பை வலுவூட்டும் திட்டத்திற்காக, 2019 ஆம் ஆண்டு முதல் உலக வங்கியிடமிருந்து இதுவரை சுமார் 160 மில்லியன் டொலர் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும், 20 மில்லியன் டொலர் கடனுதவியை பெற்றுக்கொள்வதற்கு அடுத்த வருடம் ஜூன் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version