போதை பொருட்களின் பிடியிலிருந்து மாணவர்களை பாதுகாக்க விசேட திட்டம்!

போதைப்பொருள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் ”பாதுகாப்பான நாளைய தினம்” எனும் தொனிப்பொருளில் பிரச்சாரம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைவாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பவுள்ளது.

தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷக்ய நாணயக்கார, தேசிய விஞ்ஞான அறக்கட்டளையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செபாலிகா நயனி சுதாசிங்க, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் பசிந்து குணரத்ன, செயலாளர் எம்.என்.ரணசிங்க. கல்வி அமைச்சில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version