யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியில் மருமகன் தாக்கியதில் மாமா ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கரவெட்டி, நெல்லியடி பகுதியைச் சேர்ந்த நேசராசா அன்டன் எனும் 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.