இலகு ரயில் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பம்!

இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இத்திட்டம் விரைவில் மீள ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் ஜப்பான் அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இத்திட்டத்தை மீள் மதிப்பீடு செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இதற்காக செலவிடப்பட்ட தொகை அசல் மதிப்பீட்டில் இருந்து அதிகரித்துள்ளதன் காரணமாக மதிப்பீட்டை மீண்டும் தயாரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் மற்றும் ஜப்பான் அரசாங்கத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி, அடுத்த வருடத்திற்குள் இந்த நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுக்க முடியும் என கலந்துரையாடப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version