இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொரளைபொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பொலிஸ் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து ஒரு கூரான ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் அனுராதபுரம் விஜயபுர பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.