எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி அதிகரிப்புடன் பஸ் கட்டணங்கள்; அதிகரிக்கப்படும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் சாதாரண பஸ்ஸொன்றின் கொள்வனவிற்கு சுமார் ஒரு கோடியே 57 இலட்சம் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த விலைக்கு பஸ்ஸொன்றை கொள்வனவு செய்து சாதாரண மக்களை ஏற்றிச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், பெறுமதி சேர் வரி திருத்தின் மூலம் பஸ் உதிரிபாங்களின் விலை, எரிபொருள் விலை மற்றும் சேவைக் கட்டணம் போன்ற அனைத்தும் உயர்வடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.