கிளிநொச்சி A9 வீதியின் 155ம் கட்டை பகுதியில் வீதிக்கு குறுக்கே முறிந்து வீழ்ந்த பாலை மரம் துரிதமாக அகற்றப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி A9 வீதியின் 155ம் கட்டை பகுதியில் வீதிக்கு குறுக்கே முறிந்து வீழ்ந்து
போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட பாலை மரம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பில் அரச மரக்கூட்டுத்தாபனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் துரிதமாக வெட்டி அகற்றப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.