அடுத்த வருடம் மின் கட்டணத் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்..!

2024ம் ஆண்டு ஜனவரி மாதம் மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, மின் கட்டண திருத்தத்தின் போது அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சார சபை அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய வானிலை நிலவுவதாலும், நீர்மின் நிலையங்கள் அதிகபட்ச கொள்ளளவில் இயங்குவதாலும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version