இலங்கை கடற்பரப்பிற்குள் ஆய்வுகளை மேற்கொள்ள எந்தவொரு நாட்டின் கப்பலுக்கும் அனுமதி வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாகும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் குறித்த கப்பல்கள் , சேவைகள் மற்றும் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை துறைமுகங்களுக்கு வருகை தர முடியும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தினை ஆய்வு செய்வதற்கு மற்றுமொரு சீன ஆய்வு கப்பலான XIANG YANG HONG 03 நாட்டிற்குள் வருகை தருவதற்கு சீனா அனுமதி கோரியது.
இதனூடாக ஆய்வு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ம் திகதி முதல் 20ம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு இந்தியாவினால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.