மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதிக்கு பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால்; இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பௌத்தம் மற்றும் ஏனைய மதங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ அண்மையில் நாடு திரும்பிய போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த பிணை மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்தி முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.