அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய. கல்வி அமைச்சின் செயலாளராக வசந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக ஏ.சி. மொஹமட் நஃபீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

டபிள்யூ.பி.பி. யசரத்ன பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version