மறைப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சையானது நாளை (28.12) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (29.12) ஆகிய இரு நாட்களிலும் நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் 669 தெரிவு மையங்களில் தயார் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்து, கத்தோலிக்க, பௌத்த, இஸ்லாமிய மற்றும் மறை பாடசாலை மாணவர்களுக்கு இந்த இறுதிச் சான்றிதழ் பரீட்சை நடைபெறவுள்ளது.
இந்த பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் ஞாயிறு தினங்களில் இடம்பெறும் மறை பாடசலை தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு தங்கள் அனுமதி அட்டைகள் கிடைக்காவிடில், பரீட்சை திணைக்களத்தின் apps.exams.gov.lk/principals/admissions என்ற இணையதளத்திற்குச் சென்று வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.