பஸ் கட்டணம் அதிகரிப்பு..!

பெறுமதி சேர் வரி அதிகரிப்பினையடுத்து போக்குவரத்து கட்டணங்களை மறுசீரமைப்பது தொடர்பில் பஸ், பாடசாலை போக்குவரத்து சேவை, முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக குறைந்தபட்ச பஸ் கட்டணங்கள் 35 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜனவரி மாதம் முதல் டீசல் விலை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் பஸ் கட்டண திருத்தத்தினை மேற்கொள்வது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், டீசலின் விலை அதிகரிக்கப்படுமாயின், பாடசாலை போக்குவரத்து சேவைகளின் கட்டணங்களும் அதிகரிக்கப்படுமென, அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

பெறுமதி சேர் வரி அதிகரிப்பினால் தொழிலை முன்கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுமாயின், முச்சக்கர வண்டி கட்டணங்களை மறுசீரமைப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version