JAPAN KARATE DOKUNIBAK கண்காட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் பங்கேற்பு..!

ஹட்டன் கராத்தே சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த JAPAN KARATE DOKUNIBAK கண்காட்சியில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் நிகழ்விற்கு முழுமையான அனுசரணையும் வழங்கினார்.

ஹட்டன் ஸ்ரீ பாத கல்லூரி உள்ளக அரங்கில் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கராத்தே வீரர்களின் பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் அனுசரணை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

ஹட்டன் கராத்தே சம்மேளன தலைவர் புஞ்சிபண்டா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version