வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பணிபுரியும் கடவை காப்பாளர்கள் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள அதிகரிப்பு மற்றும் நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரயில் கடவை காப்பாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் பொதுமக்கள் அவதானமாக ரயில் பாதையை கடக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.