ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பழைய பூங்காவிற்கு அருகில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலும் குருந்தூர் மலை விவகாரம் உள்ளிட்ட விடயங்களுக்கு தீர்வு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் இளைஞர் அணி தலைவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.