வத்தளையில் உள்ள பாடசாலை ஒன்றின் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் ஒருவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பயிற்றுவிப்பாளரின் அறையில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, வு – 56 ரக துப்பாக்கி ஒன்றும், 4 மெகசின்கள் மற்றும் தோட்டாகள் சில மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆயுதங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவன் கனேமுல்ல சஞ்சீவவிற்கு சொந்தமானது என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.