மக்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த பலத்த மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் பணிப்புரை விடுத்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மாவட்ட அரசாங்க அதிபர் நேற்றைய தினம் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளையும் கேட்டறிந்துகொண்டார்

இதன்போது ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம், கிரான் பிரதேச செயலாளர் ராஜ்பாபு, அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.ரியாஸ், மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரி வ.ஜீவானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version