இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆரம்பம்!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான் கடந்த ஆண்டு திருச்சிக்கு விஜயம் செய்து இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் சுற்றுலா துறையின் ஒத்துழைப்புடன் இன்று முதல் ஒரு வாரம் பொங்கல் விழா நடைபெற உள்ளது.

விழாவின் முதல் நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று (06.01) காலை 10 மணிக்கு திருகோணமலை, சம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 200 காளைகளும் 100 இற்க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் திருகோணமலை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version