முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவோம் என பாராளுமன்ற உறுப்பினர் துஷாரா இந்துனில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊழலில் ஈடுபட்டமைக்கு அமைச்சு பதவி மாத்திரமே மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் இன்னும் கெபினட் அமைச்சராக உள்ளார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் அதிகாரிகள் சிறையில் உள்ளதாகவும் அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கமையவே முன்னாள் செயலாளரும் தனது பணியை செய்துள்ளார் எனவும் செயலாளர் கடிதங்களில் கையொப்பமிட்டுள்ளதால் சட்ட ரீதியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீண்டும் முன்வைக்குமாறு நாட்டிலுள்ள பல்வேறு தரப்பினரும்,சிவில் அமைப்புகளும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் கோரிக்கை விடுத்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் துஷாரா இந்துனில் தெரிவித்துள்ளார்.