ஏயுவு அறவீட்டில் பிரச்சினைகள் நிலவுமாயின் அது தொடர்பிலான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
முறையற்ற விதத்தில் சிலர் வரி அறிவிடுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலான முறைப்பாடுகளை எழுத்து மூலம் சாட்சியங்களுடன் cgir@ird.gov.lk எனும் இணையத்தள முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் என்பதுடன் “ஆணையாளர் நாயகம்,
உள்நாட்டு இறைவரி திணைக்களம்,
சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை,
கொழும்பு 02”
என்ற முகவரிக்கும் கடிதம் மூலம் முறைபாடுகளை அறிவிக்க முடியும் என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சேபாலிகா சந்திரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.