இந்திய பெருங்கடல் மற்றும் பிரேசிலில் சக்தி வாய்ந்த நில அதிர்வுகள்..!

இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

கடற்பகுதியின் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இன்று அதிகாலை நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, பிரேசில் நாட்டின் மேற்கு பகுதியிலும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version