மலையகத்தில் பிரமாண்ட முறையில் தேசிய தைப்பொங்கல் விழா..!

பிரமாண்ட முறையில் ஹட்டனில் தேசிய தைப்பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.

கலை, கலாசார நிகழ்வுகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் போட்டிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தேசிய தைப்பொங்கல் விழா வெற்றிகரமாக நடைபெற்றது.

தோட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தது.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் வாழ்த்து செய்திகளை அனுப்பி வைத்திருந்தனர்.

1008 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு, கோலப்போட்டி, சிலம்பாட்டம், தப்பாட்டம் என பல கலை, கலாசார அம்சங்களுடன் விழா நடைபெற்றது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இ.தொ.காவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், அமைச்சுகளின் செயலாளர்கள், நுவரெலியா மாவட்ட அரச அதிபர், அரசாங்க அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், தென்னிந்திய நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஸ், சம்யுக்தா, மீனாக்சி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோருக்கும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மலையகத் தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்கவைப்பதற்கான நகர்வுகளில் மற்றுமொரு அங்கமாக தேசிய பொங்கல் விழா பார்க்கப்படுகின்றது.

மலையகத்தில் பிரமாண்ட முறையில் தேசிய தைப்பொங்கல் விழா..!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version