இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் நேற்று (21.01) 19 வயதிற்குட்பட்ட உலககிண்ணத்தின் 6 ஆவது போட்டி கிம்பர்லீயில் நடைபெற்றது. இந்த போடடியில் இலங்கை அணி டக் வத் லுயிஸ் முறையில் 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 48.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றது. இதில் டினுற களுபஹான 60(55) ஓட்டங்களயும், ஷாருஜன் ஷண்முகனாதன் ஆட்டமிழக்காமல் 41(40) ஓட்டங்களையும், ருசந்த கமகே 31(59) ஓட்டங்களையும், ரவிஷன் டி சில்வா 31(87) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கோஹல் எக்ஸ்டீன் 3 விக்கெட்களையும், நெவ்மான் நயம்குரி, மத்தியூ ஸ்கொன்கென் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், அனெசு கமுரிவோ, ரயான் சிம்பி, பனாஷே தருவிங்கா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
டக் வத் லுயிஸ் முறையில் 22 ஓவர்களில் 129 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்காக குறைக்கப்பட்டது. சிம்பாவே அணி 21.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதில் மத்தியூ ஸ்கொன்கென் 27(19) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் மால்ஷா தருபதி 4 விக்கெட்களையும், ருவிஷன் பெரேரா, விஷ்வ லஹிரு ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், கருக சன்கெத், டினுற களுபஹான ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். ஷாருஜன் ஷண்முகனாதன் 3 ஆட்டமிழப்பு சந்தர்ப்பஙகளை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த போட்டியின் நாயகனாக டினுற களுபஹான தெரிவு செய்யப்பட்டார்.
நியூசிலாந்து மற்றும் நேபாளம் அணிகளுக்கிடையில் நேற்று (21.01) 19 வயதிற்குட்பட்ட உலககிண்ணத்தின் 7 ஆவது போட்டி ஈஸ்ட் லண்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 64 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களை பெற்றது. இதில் ஸ்னேஹித் ரெட்டி ஆட்டமிழக்காமல் 147(125) ஓட்டங்களையும், ஒஸ்கர் ஜாக்ஸன் 75(81) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுபாஷ் பந்தரி 3 விக்கெட்களையும், குல்சன் ஜா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய நேபாளம் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 238 ஓட்டங்களை பெற்றது. இதில் அர்ஜுன் குமால் 90(104) ஓட்டங்களையும், தேவ் கானல் 36(34) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மாசன் க்ளார்க் 3 விக்கெட்களையும், எவால்ட் ஸ்குரூடர், ஒஸ்கர் ஜாக்ஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியின் நாயகனாக ஸ்னேஹித் ரெட்டி தெரிவு செய்யப்பட்டார்.