குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குடாவெல்ல கடலில்இன்று பகல் ஐவர் குளிக்கச் சென்றுள்ளனர்
இதன்போது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடாவெல்ல பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் அதே பகுதியை சேர்ந்த 35 வயதான நபரொருவர் காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.