”மறைந்த அமைச்சர் தொடர்பில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டும்” – மஹிந்த அமரவீர!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மரணம் குறித்து இதுபோன்ற கருத்துகளை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது மரணம் குறித்து சமூக வலைதளங்களில் மிக மோசமான பதிவுகள் வந்துள்ளதாகவும், பலரும் இவ்வாறான கருத்துக்களை பதிவிட்டுள்ளதாகவும், இது தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணைகளில் ஒரு கட்சியை சேர்ந்தவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version