பெலியத்த பகுதியில் கட்சித் தலைவர் ஒருவர் உட்பட ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த மேலும் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மிரிஹான முகாமில் உள்ள அதிகாரிகள் குழுவினால் நேற்று (25.01) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதுர்துவ பிரதேசத்தில் வைத்து காலி மாகல்ல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரும், கதுருவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் கைது செய்யப்படும்போது ஒருவரிடமிருந்து 30 மில்லிகிராம் ஹெரோயினும், மற்றுமொருவரிடமிருந்து 06 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.