”அஹிம்சையை போதித்த பாரத தேசத்திற்கு குடியரசு தின நல்வாழ்த்துக்கள்” – ஜீவன் தொண்டமான்

ஒட்டுமொத்த உலகுக்குமே அஹிம்சையை போதித்த நாடுதான் பாரத தேசமாகும்,
நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையுடன் கூடிய இந்திய தேசத்திற்கு இன்று (26.01) குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் இந்தியா தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருவதுடன், அனைத்து இந்திய மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும், தெற்காசிய பிராந்தியத்தின் காவலாக விளங்கும் இந்தியா மென்மேலும் உயரவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version