பாராளுமன்றில் இன்றைய தினம் (17/11) ஐக்கிய மக்கள் சக்தியினர் ஈடுபட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது தமிழ் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரதமரின் இணைப்பு செயலாளர் கீத்நாத் காசிலிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின் போது பயன்படுத்திய பதாகைகளில் தமிழ் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதேநேரம் ‘நந்தி ஒழிக நீதி வாழ்க” என எழுதப்பட்டிருந்த குறிப்பிட்ட ஒரு பதாகையில் இந்து மக்களின் புனித சின்னமான நந்தியை அவமதிப்பதாகவும் அதற்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.