தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் தரவுகளை நீக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எபிக் லங்கா டெக்னோலஜி நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் புத்திக சீ ராகலவினால் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
எனினும், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் குறித்தவழக்கை ஜனவரி 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு க்கு உத்தரவிட்டார்.