மாவனெல்லை நகரில் பஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்த கடை வரிசையில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக சுமார் 30 சிறிய கடைகள் தீர்க்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (29.01) அதிகாலை 1.00 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும், மாவனல்லை பொலிஸார் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.