பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று (28.01) 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத்தின் 22 ஆவது போட்டி ஈஸ்ட் லண்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்களினால் வெற்றி பெற்று அடுத்த சுற்றிற்கு தெரிவாகியுள்ளது. நியூசிலாந்து அணி இந்த போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும் அவர்களும் அடுத்த சுற்றிற்கு தெரிவாகியுள்ளார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 38 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 140 ஓட்டங்களை பெற்றது. இதில் லச்லன் ஸ்டக்ப்பொல் 42(39) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் உபைத் ஷா, அரபத் மின்ஹாஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், நவீத் அஹமட் கான் 2 விக்கெட்களையும், அலிப் அஸ்பன்ட், மொஹமட் சீஷான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 25.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 144 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷஹ்சைப் கான் ஆட்டமிழக்காமல் 80(86) ஓட்டங்களையும், ஷமில் ஹுசைன் அட்டமிழக்காமல் 54(66) ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்த போட்டியின் நாயாகனாக ஷஹ்சைப் கான் தெரிவு செய்யப்பட்டார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கிடையில் நேற்று (28.01) 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத்தின் 23 ஆவது போட்டி புலூம்பொன்டெய்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி 201 ஓட்டங்களினால் வெற்றி பெற்று அடுத்த சுற்றிற்கு தெரிவாகியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றது. இதில் அர்ஷின் குல்கர்னி 108(118) ஓட்டங்களையும், முஷீர் கான் 73(76) ஓட்டங்களையும், உதய் சஹரன் 35(27) ஓட்டங்களையும்ம் பெற்றனர். பந்துவீச்சில் அடீன்ற சுப்ரமணியன் 2 விக்கெட்களையும், ரிஷி ரமேஷ், ஆர்யா கார்க், ஆரின் நட்கர்னி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய அமெரிக்கா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது. இதில் உட்கர்ஷ் ஸ்ரீவஸ்தவா 40(73) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் நமன் திவாரி 4 விக்கெட்களையும், ராஜ் லிம்பன்னி, முருகன் அபிஷேக், ப்ரியன்ஷு மொலியா, சௌமி பாண்டி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியின் நாயகனாக அர்ஷின் குல்கர்னி தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நேற்று (28.01) 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத்தின் 24 ஆவது போட்டி கிம்பெர்லீயில் நடைபெற்றது. இந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணி 6 விக்கெட்களினால் வெற்றி பெற்று அடுத்த சுற்றிற்கு தெரிவாகியுள்ளது. இலங்கை அணி இந்த போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும் அவர்களும் அடுத்த சுற்றிற்கு தெரிவாகியுள்ளார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றது. இதில் டினுற கழுபஹான 64(78) ஓட்டங்களையும், ரவிஷன் டி சில்வா 30(42) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் களும் விட்லெர் 3 விக்கெட்களையும், மஹ்லி பெயர்ட்மென், டொம் கம்பெல் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஹர்ஜாஸ் சிங், டொம் ஸ்ட்ரேகர், ரப் மக்மில்லன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 48.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்றது. இதில் ரயான் ஹிக்ஸ் ஆட்டமிழக்காமல் 77(104) ஓட்டங்களையும், ஹரி டிக்சொன் 49(41) ஓட்டங்களையும், டொம் கம்பெல் ஆட்டமிழக்காமல் 33(41) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விஷ்வ லஹிரு 2 விக்கெட்களையும், சினெத் ஜெயவர்த்தன, மால்ஷா தருப்பதி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியின் நாயகனாக ரயான் ஹிக்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.
இந்தியா, பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளன.