ஹொரணையில் இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்பு!

களுத்துறை – ஹொரணை பகுதியில் உள்ள சிறிய குளத்திலிருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று (29.01) அங்குருவத்தோட்ட பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அத்திலிவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இராணுவ சிப்பாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.01) சிப்பாய்களுக்கான உடற் பயிற்சியின்போது கலந்து கொள்ளவில்லை எனவும்அதன் பின்னர் அவர் தேடப்பட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version