”விடாமுயற்சி’ படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு நிறைவு!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் தயாராகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளதாக இந்திய சினிமா வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது.

இயக்குநரும், நடிகருமான மகிழ்திருமேனி இயக்கத்தில் தயாராகி வரும் பு‘விடாமுயற்சி’ திரைப்படத்தில், அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா காஸென்ட்ரா, பிரணவ் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அபுதாபியில் நடைபெற்றதுடன், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் இடம்பெற்றுள்ளது.

இந்த திரைப்படம் குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version