பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அடுத்த மாதம் 8 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரச தகவல்களை கசியவிட்டமை தொடர்பில் இம்ரான்கானுக்கு அந்நாட்டு நீதிமன்றத்தினால் இந்த தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமராக இருந்த போது, இம்ரான் கானை பதவி நீக்குவதற்கு அமெரிக்கா சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.
அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பான இரகசிய ஆவணத்தை இம்ரான் கான் திருப்பித் தரவில்லை என வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இன்று இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியின் துணை தலைவர் குரேஷிக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.