எதிர்க்கட்சித் தலைவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்..!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று ஏற்பாடு ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சிலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

போராட்டத்தின் போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version