காலி – மாத்தறை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு பிரஜைகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
காலி – மாத்தறை பிரதான வீதியின் மிதிகம பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்களிளொன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.