பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மாணவர்கள் மீதான அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும் , பெறுமதி சேர் வரியை குறைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்கு அருகில் ஆரம்பமான போராட்டம், கலஹா சந்திக்கு வந்தபோது அதனைக் கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.