சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல பிணையில் விடுவிப்பு..!

கைது செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியமை, பொதுமக்களின் அமைதியை சீர்குலைத்தமை, பொதுமக்களுக்கு அசொளகரியங்கள் ஏற்படும் வகையிலான காணொளிகளை வெளியிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பியத் நிகேஷலவை கைது செய்யப்பட்டார்.

இதன்பின்னர் அவர் நேற்று (30) நீதிமன்றத்தில் முன்னிலைப்பட்டதையடுத்து அவரை இன்று(31) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை பிரதான நீதவான், 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவரை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version