மருத்துவ சங்கங்கள் நீங்கலாக சுமார் 72 சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் இன்று காலை6.30 முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
DAT கொடுப்பனவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்த போதிலும் இதுவரை எவ்வித கலந்துரையாடல்களிலும் ஈடுபடவில்லை என சுகாதார ஊழியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எவ்வாறாயினும், குறித்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லையென அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதாரத் துறையின் தற்போதைய நிலைமை தொடர்பில் மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர் அகில இலங்கை தாதியர் சங்க உறுப்பினர்கள் வேலை நிறுத்தில் பங்குகொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளனர்.