மொட்டு கட்சியில் இணையும் மறைந்த அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி?

விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் கட்சி அதிக கவனம் செலுத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் நாமல் ராஜபக்ச தலைமையிலான இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கலந்துரையாடல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான பிரேரணை கட்சியின் மத்திய குழு மற்றும் செயற்குழுவில் இன்றும் நாளையும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆலோசனைக்கு கட்சியின் உயர்மட்ட தலைமையின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என சட்டத்தரணி சாமரி பெரேரா அண்மையில் தெரிவித்திருந்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version