தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையிலுள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் வீதியை கடக்க முற்பட்ட நிலையில் சம்மாந்துறையிலிருந்து அம்பாறையை நோக்கி பயணித்த பாரவூர்தியில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்மாந்துறையை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாரவூர்தியின் சாரதி சம்மாந்துறை பொலிஸார் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.