‘‘புதிய தேசத்தை அமைப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழில் சுதந்திர தின நிகழ்வு..!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று காலை 8 மணிக்கு ‘‘புதிய தேசத்தை அமைப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது.

இந்நிகழ்வு அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், அக வணக்கம், சர்வ மத தலைவர்களின் ஆசியுரை, பிரதம விருந்தினர் உரை, மற்றும் மரநடுகை நிகழ்வுகளும் நடைபெற்றன.

பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
இதன்போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

‘‘எமது நாடு எதிர்நோக்குகின்ற பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து சமூக பொருளாதார பண்பாட்டு சரிவுகளிலிருந்து நாட்டை நேர் நிறுத்தி அபிவிருத்திப் பாதையை நோக்கி முன்னேற்ற வேண்டும், ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டையும், நாட்டு மக்களையும் மீட்கும் பொறுப்பு இன்றியமையாதது. ஆதலால் “புதிய தேசம் அமைப்போம்” எனும் தொனிப்பொருளில் 76ஆவது சுதந்திர தினத்தில் சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்ப கிராம மட்டத்திலிருந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவேண்டும்’’

இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், 512 உப கட்டளைத் தளபதி பிரிகேடியர் லக்ஸ்மன் சமர திவாகர, காங்கேசன்துறை பிரதி பொலிஸ் அத்தியட்சகர் விஜயவர்த்தன மற்றும் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட செயலக பிரதம கணக்காளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், விமானப்படை பிரதிநிதி , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version