கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ் 705 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 143 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின், 134 கிராம் 578 கிராம் ஐஸ், 2 கிலோ 888 கிராம் கஞ்சா, 3 கிலோ 339 கிராம் மாவா மற்றும் 255 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 05 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 03 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.